Wednesday, October 15, 2008

மகத்துவ கீரைகள்

உணவே மருந்து என்று சொல்வார்கள். இதை சும்மா சொல்லவில்லை. சில உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட்டால் நோய்கள் நம்மை நெருங்கவே பயப்படும் என்பதே உண்மை. மனிதனின் நோய்கள் நன்மை நெருங்கவே எதிர்ப்பு சக்திக்கும். ஆரோக்கியமான வாழ்வுக்கும் துணை நிற்கும் உணவு வகைகளில் முக்கியமனவை இந்த கீரைகள்.

இதில் பல வகைகள் உள்ளன. எந்தெந்த கீரைகள் என்னென்ன பயன்களை நமக்குத் தருகின்றன என்பதை இங்கே பார்ப்போம்:

மணத்தகாளி கீரை : வாய்ப் புண்ணையும், குடல் புண்ணையும் குணமாக்கும்.

காசினிக்கீரை : ஈரலை பலப்படுத்தும், ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

சிறுகீரை : பித்தத்தை குறைக்கும். கண்ணுக்கு குளிர்ச்சியைத் தரும்.

பருப்புக்கீரை மற்றும் பசலைக்கீரை : உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியைத் தரும்.

வல்லாரைக் கீரை : நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

புதினாக் கீரை : பசியைத் தூண்டும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். அஜீரணத்தை போக்கும்.

பொன்னாங்கண்ணிக்கீரை : மேனியை பொன் போல் பலபலக்கச் செய்யும். கண் பார்வையை தெளிவாக்கும்.

தூதுவளை : சளியையும், இருமளையும் போக்கக் கூடியது இது.

தண்டுக்கீரை : சிறுநீர் எரிச்சல், வயிற்றுக்கடுப்பு போன்ற நோய்களை குணப்படுத்தும்.

முடக்கற்றன் கீரை : வாதத்தை தணித்து மூட்டு வலியை போக்கும்.

No comments: